எபிரெயர், இரண்டாம் அதிகாரம் பாகம் #3 57-08-28 217. வது, 3- வது, 9-வது, 10-வது அதிகாரம், அங்கிருந்து "உள்ளே, ஓ என்னே! உங்களுடைய பென்சிலையும், எழுதும் காகிதத்தையும் மற்றும் ஒவ்வொரு காரியத்தையும் ஆயத்தமாக வைத்துக் கொள்ளுங்கள், ஏனென்றால் கர்த்தர் நமக்கு ஒரு மகத்தான நேரத்தை அளிக்கப் போகிறார் என்று நான் விசுவாசிக்கிறேன். இப்பொழுது நாம்... 218 பவுல் கர்த்தராகிய இயேசுவை சரியான இடத்திலும், ஸ்தானத்திலும் உயர்த்திக் கூறிக் கொண்டிருக்கிறான். இப்பொழுது நாம் இன்றிரவு இதனூடாக கற்றுணர்வோமேயானால், ஞாயிறு காலை... இதில் பெரும்பாலானவை சரியாக ஞாயிறு காலை செய்தியோடு ஒன்று சேரப் போகிறது, ஏனென்றால் அது "ஓய்வு நாளை வேறு பிரித்துக் கொண்டிருக்கிறது.'' ஓய்வு நாளை ஆசரிப்பவர்களுக்கு மத்தியிலே அது ஒரு பெரிய கேள்வியாய் உள்ளது. ஞாயிறு காலை நீங்கள் யாவரும் வரும்படி நான் உங்களை அழைக்கிறேன். ஏனென்றால் ஆராதனைக்கானது சனிக் கிழமையா அல்லது ஞாயிற்றுக் கிழமையா, எது சரியானது? அதைக் குறித்து வேதம் என்ன கூறுகிறது? ஆகையால் அதன்பின்னர்... இந்தப் புத்தகம் நியாயப் பிரமாணத்தையும், கிருபையையும் வேறு பிரித்துக் கொண்டிருக்கிறது, அது ஒவ்வொன்றையும் அதனுடைய இடத்தில் பொருத்திக் கொண்டிருக்கிறது. எபிரெயர்கள் நியாயப் பிரமாணத்தினால் வளர்க்கப்பட்டிருந்தனர். நியாயப் பிரமாணத்தோடு கிருபை என்ன பாகம் ஏற்று செயலாற்றியது என்று பவுல் அவர்களுக்கு கூறிக்கொண்டிருந்தான். 219 இப்பொழுது, நாம் ஒரு சிறு பிண்ணணியைப் புரிந்துகொள்வோமாக. நாம் மீண்டும் துவங்கப் போகிறோம். 220 ஆக நான் எனக்கென்று வாசிப்பதற்கான மூக்குக் கண்ணாடியை வாங்கியுள்ளேன். எனக்கு ஒரு கால்.. இன்றிரவு எனக்கு ஒரு தடுமாற்றம் ஏற்பட நேர்ந்தால், அதற்காகவே நான் அவைகளை வாங்கி வைத்துள்ளேன். எனக்கு யாவும். உங்களுக்குத் தெரியும், எனக்கு ஐம்பது வயதாக இன்னும் இரண்டு வருடங்களே உள்ளன, எனக்கு அருகில் உள்ளதையே நான் வழக்கமாக காண்பது போல், காண முடியவில்லை. என்னுடைய பார்வையில்.. வார்த்தைகள் கலக்கமாக தெரிவதை நான் கவனிக்கத் துவங்கினேன், எனவே என்னுடைய பார்வை குறைந்துகொண்டே போவதை நான் எண்ணிப்பார்த்தேன். ஆகையால் நான் ஒரு பரிசோதனைக்காக சென்றேன். அப்பொழுது மருத்துவரோ, "இல்லை. மகனே, நீங்கள் நாற்பது வயதைக் கடந்து விட்டீர்கள்" என்றார். மேலும் அவர், "நல்லது, நான் போதிய காலம் வாழ்வேனேயானால், அது அப்பொழுது மீண்டும் திரும்பி வந்துவிடும், அதாவது அந்த பார்வைக் குறைவு மீண்டும் சரியாகிவிடும்" என்று கூறினார். எனவே அவர், "இப்பொழுது உங்களால் உங்களுடைய வேதாகமத்தை உங்களிடத்திலிருந்து தள்ளி வைத்துவிட்டு வாசிக்க முடியுமா?" என்று கேட்டார். 221 அதற்கு நானோ, "முடியும்" என்றேன். 222 பின்னர் அவர், "கொஞ்சங் கழித்து, படிக்கையில் உங்களுடைய கரம் போதுமான தூரம் நீண்டிருக்கப் போவதில்லையே" என்றார். 223 ஆகையால் நான் - நான் இப்பொழுது நம்புகிறேன், இதைப் படிக்கையில், அதாவது நான் வைத்துள்ள இந்த சிறிய காலின்ஸ் என்ற அச்சகப் பிரிவினரின் வேதமோ பெரிய வடிவுலுள்ள எழுத்துக்களை இதில் அச்சடித்துள்ளது. எனவே என்னால் இதை நன்கு வாசிக்க முடியும். ஆனால் நாம் பெரிய பாடங்களை எடுக்கையில், அப்பொழுது ஆழமான இடங்களுக்கு சென்று, நாம் பழைய ஏற்பாட்டையும், புதிய ஏற்பாட்டையும் ஒன்றாக இணைத்துக் காட்ட வேண்டியதாயுள்ளது. நான் ஒரு சிறிய ஸ்கோபீல்டு வேதாகமத்தையே வைத்துள்ளேன். நான் ஸ்கோபீல்டு வேதாகமத்தையும், அதில் உள்ள குறிப்புகளையும் உபயோகிப்பதுண்டு. ஆனால் நான் ஸ்கோபீல்டு அவர்கள் எழுதியுள்ள விளக்கக் குறிப்புகளை வாசிப்பதில்லை. ஏனென்றால் ஸ்கோபீல்டு அவர்கள் எழுதியுள்ள அவருடைய அநேக ஊகக்கருத்துரைகளோடு நான் ஒவ்விப்போவதில்லை. ஆனால் அது வடிவமைக்கப்பட்டுள்ள விதம் எனக்குப் பிடிக்கும், ஏனென்றால்.... நான் அதை நீண்ட காலமாக வாசித்து உபயோகப்படுத்திக் கொண்டு வருகின்றபடியால், என்னால் என்னுடைய பொருளை எப்படி கண்டறிய வேண்டும் என்பது எனக்குத் தெரியும். 224 இவை யாவுமே எனக்கு புதியது, போதிக்கிறதில், நான் ஒரு பெரிய வேதபாட ஆசிரியர் அல்ல. ஆனால் நீங்கள் சற்று நேரம் என்னோடு பொறுத்துக் கொள்வீர்களேயானால் அப்படியே நான் அறிந்துள்ள சத்தியத்தை எப்படியாவது உங்களுக்கு கூறிவிடுவேன். 225 இப்பொழுது, இந்தப் புத்தகம் பவுல் எழுதினது என்பது நினைவிருக்கட்டும். அவன்... நாம் எப்படி அதை கண்டுபிடித்தோம்? அவன் துவக்கத்திலேயே ஒரு பெரிய ஆசிரியரோடு இல்லை ஒரு பெரிய வேத பண்டிதரோடு இருந்தான். எனவே அவன் பழைய ஏற்பாட்டில் பயிற்றுவிக்கப்பட்டிருந்தான். அவனுடைய ஆசிரியர் யாராயிருந்தார் என்று நாம் கண்டுபிடித்தோம் என்பதை எவரேனும் எனக்கு கூறமுடியுமா? (சபையோர், "கமாலியேல்" என்கின்றனர்.ஆசி.] கமாலியேல், அந்த நாளிலிருந்த பெயர் பெற்ற ஆசிரியர்களில் ஒருவர். அப்பொழுது பவுல்... ஒரு நாள்... நாம் கண்டறிந்தோம்.... 226 அவன் பவுல் என்று அழைக்கப்படுவதற்கு முன்னர், அவனுடைய பெயர் என்னவாயிருந்தது என்பதை யாராவது எனக்கு கூறமுடியுமா? (சபையோர், "சவுல்" என்கின்றனர். ஆசி.] சவுல். அவன் எருசலேமில் ஒரு பெரிய அதிகாரத்தில், ஒரு மத ரீதியான அதிகாரத்தில் இருந்தான். அவன் ஒரு உண்மையான பயிற்சி பெற்ற, பக்தி வாய்ந்த மனிதனாய் உருவாகியிருந்தான். அவன் நான்கு அல்லது ஐந்து வித்தியாசமான மொழிகளில் பேசக் கூடியவனாகவும், மிகவும் புத்திசாலியானவனாகவும் இருந்தான். நல்லது, ஆனால் அவனுடைய கல்வியறிவும், புத்திசாலித்தனமும் அவனுக்கு உதவியதா? இல்லையே. அவன் கிறிஸ்துவை கற்றுக் கொள்ள அவன் அறிந்திருந்த எல்லாவற்றையும் மறக்க வேண்டியதாயிருந்து என்று அவனே கூறினான். 227 ஆகையால் அதற்கு ஒரு புத்திசாலியான மனிதனோ அல்லது கல்விகற்ற மனிதனோ தேவைப்படுகிறதில்லை என்பதை நாம் கண்டறிகிறோம். அதற்கு எப்படியிருந்தாலும் பொருட்படுத்தாமல், தேவனுக்கு முன்பாக மனப்பூர்வமாய் தன்னைத் தாழ்த்துகிற ஒருஒரு மனிதனே தேவைப்படுகிறது. 228 டிவைட் மூடி அவர்களுடைய எழுத்துக்கள் என்னவென்று புரிந்துகொள்ள முடியாதபடி அவ்வளவு அறைகுறையாயிருக்குமளவிற்கு அவ்வளவு கல்வியறிவற்ற வராயிருந்தார் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்களா? அவர்கள் எல்லா நேரத்திலுமே அவருடைய செய்திகளை எழுத்துபிழையின்றி சரிசெய்ய வேண்டியதாயிருந்தது. அவர்அவர் அப்பேர்பட்ட ஒரு அறைகுறையாக சரிவர எழுத அறியா கல்வியறிவற்றவராயிருந்தார். 229 வேதத்தில் பேதுருவும், யோவானும் தங்களுடைய சொந்த பெயரையும் கூட எழுத முடியாதபடிக்கும், அவர்களுக்கு முன்னால் உள்ளதையும் கூட படித்து அறிந்துக்கொள்ள முடியாத அளவிற்கு அவ்வளவு படிப்பறிவில்லாதவர்கள் என்று கூறப்பட்டுள்ளதை நீங்கள் அறிவீர்களா? பரலோக ராஜ்ஜியத்தின் திறவு கோல்களைக் கொண்டிருந்த அப்போஸ்தலனாகிய பேதுரு தனக்கு முன்னால் எழுதப்பட்டுள்ள அவனுடைய பெயரைக் கூட அறியாதவனாயிருந்தான். அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். வேதம், "அவன் படிப்பறியாதவனும், பேதமையுள்ளவனுமாயிருந்தான்" என்று கூறியுள்ளது. ஆகையால் அது எனக்கு ஒரு வாய்ப்பினைத் தருகிறது. ஆமென். ஆம் ஐயா. அப்படிப்பட்ட ஒரு மனிதனுக்கு தேவன் செய்யக் கூடியதைக் கண்டறிய அது உதவுகிறது. 230 இப்பொழுது, நாம் கண்டறிவதென்னவெனில், பவுல் ஒரு மகத்தான அனுபவத்தை பெற்றுக் கொண்டவுடனே... நான் உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். அது கிறிஸ்துவண்டை வருவதற்கான ஒரு அனுபவமாய் உள்ளதா? ஒவ்வொருவரும் ஒரு அனுபவத்தை உடையவராயிருக்கிறார்களா? [சபையோர், "ஆம்" என்கின்றனர்.ஆசி.] ஆம் ஐயா. ஆம் ஐயா. அது ஒரு பிறப்பு. அது ஒரு அனுபவம். நாங்கள் அண்மையில் ஒரு லூத்தரன் கல்லூரியில் இருந்தோம்.... 231 இன்று பிற்பகல் பன்னிரண்டு மணிக்கு அங்கேயிருந்து டாம் ஹேரி அவர்களோடு மதிய உணவு உண்ண வேண்டிய சிலாக்கியம் எனக்கு உண்டாயிருந்தது. அயர்லாந்து நாட்டைச் சார்ந்த புகழ்ப்பெற்ற ஜெப வீரரான அவரைக் குறித்து எத்தனை பேர் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்? அவர் இந்த சகோதரன் எப் அவர்களோடு அவருடைய நிகழ்ச்சியில் இருந்து வந்துள்ளார் மற்றும் இங்கே அமெரிக்காவில் உள்ள பல இடங்களில் செயலாற்றியிருக்கிறார். இன்றைக்கு நான் அவரோடு பகல் விருந்து உண்டேன். நாங்கள்... நான் கிட்டத்தட்ட மூன்று மணி நேரங்கள் காலதாமதமாக வந்துள்ளேன். நாங்கள் சாப்பிடும்போது ஏறக்குறைய நான்கு மணியாவதற்கு பதினைந்து நிமிடங்கள் இருந்தன. ஆனால் அது சரியாயிருந்தது. அப்பொழுது இயேசு கிறிஸ்து எல்லா காரியங்களுக்கும் எப்படி தலையாயிருக்கிறார் என்ற இந்தக் காரியங்களின் பேரில் நாங்கள் விவாதித்துக் கொண்டிருந்தோம். 232 இப்பொழுது, பவுல் இதைக் கண்டறிந்தான், அவன் இந்த அனுபவத்தை உடையவனாயிருந்தான். அவன் இந்த அனுபவத்தை ஏற்றுக் கொள்ளும் முன்னர், அவன் வேதாகமத்திற்கு திரும்பிச் செல்ல வேண்டியவனாயிருந்தான். எனவே அவன் இங்கிருந்து புறப்பட்டு மற்றொரு தேசத்திற்குள்ளாகச் சென்றான். அவன் அங்கே மூன்று வருடங்கள் தரித்திருந்து, தன்னுடைய அனுபவம் சரியாயிருந்ததா என்று காணும்படிக்கு வேதவாக்கியங்களை ஆராய்ந்துப் பார்த்தான் என்பதை நாம் கண்டறிகிறோம். 233 இப்பொழுது, அவன் ஒரு மகத்தான காரியத்தை சந்திக்க வேண்டியதாயிருந்தது என்பதை நாம் அறிந்து கொள்கிறோம். எனவே அவன் துன்பப்படுத்தியிருந்த அதேக் காரியங்கள் சரியாயிருந்தன என்று திரும்பி வந்து தன்னுடைய சபைக்கும், எல்லா ஜனங்களிடத்திற்கும் சொல்ல வேண்டியதாயிருந்தது, 234 அது போன்ற ஏதோ ஒரு காரியத்தை நீங்கள் செய்யவேண்டியதாயிருந்ததா? நிச்சயமாக, கிட்டத்தட்ட நீங்கள் எல்லோருமே திரும்பி வந்து, "'பரிசுத்த உருளைகள்' என்று நாம் அழைத்த அந்த ஜனங்கள் சரியாயிருக்கின்றனர் என்பதைக் கண்டறிந்தேன்" என்று கூற வேண்டியதாயிற்று. புரிகிறதா? அது தான் அது. நாம் அப்படியே திரும்ப வேண்டியதாயிற்று. நாம் ஒரு காலத்தில் வெறுத்த எல்லாக் காரியங்களையும், நாம் இப்பொழுது நேசிக்கிறோம். அது ஒரு மனமாற்றமாய், ஒரு விசித்திரமான காரியமாய், விநோதமானதாயுள்ளது. 235 இப்பொழுது, நான், "பரிசுத்த உருளையை " குறித்த ஒரு வாக்குமூலத்தைக் கூறினேன். அப்படிப்பட்ட ஒரு காரியமேக் கிடையாது. அப்படிப்பட்ட ஒரு காரியமே கிடையாது. ஆனால் அவர்கள் அந்த ஜனங்களை பரிசுத்த ஜனங்கள் என்று அழைக்கிறார்கள். ஆனால் பரிசுத்த உருளைகளே இல்லை. அப்படிப்பட்ட ஒரு காரியமேயில்லை. என்னால் காண முடிந்த தொள்ளாயிரத்து அறுபதுக்கும் சற்று அதிகமான, வித்தியாசமான ஸ்தாபனங்களில் கூட அதைப் போன்று எந்த சபையும் அந்தப் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பதிவேக் கிடையாது. பரிசுத்த உருளை என்ற அப்படிப்பட்ட ஒரு ஸ்தாபனமேக் கிடையாது. அது பிசாசு அந்த சபையின் மேல் பொருத்தியுள்ள ஒரு பெயராயுள்ளது. 236 ஆனால் அவர்கள் அந்த நாளில் அவர்களை... அழைப்பதோ... அவர்கள் பவுலின் நாட்களில் அவர்களை என்னவென்று அழைத்தார்கள் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? மதபேதமுள்ளவர்கள். மத பேதம் என்பதன் பொருள் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? "பைத்தியம்." அது பைத்தியக்கார ஜனங்கள் என்பதாகும். ஆகையால் நான் ஒரு மதபேதமுடையவனாயிருக்கிறபடியால், சீக்கிரத்தில் ஒரு "பரிசுத்த உருளை" என்று அழைக்கப்படுவேன். நீங்கள் அழைக்கப் படமாட்டீர்களா? ஆகையால் அவர்கள் அவ்வாறு அழைக்கப்பட்டபோது, களிகூர்ந்தனர். நாம் அதைக் குறித்து என்ன செய்ய வேண்டும் என்று இயேசு கூறினார்? அவர், "சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்: உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே" என்றார். அவர்கள் அதைச் செய்தனர். 237 அவர், "களிகூருங்கள்" என்றார். மிக மிக அதிகமாக களிகூருதல் என்பது, உண்மையான சந்தோஷமாயிருக்கிறது. சீஷர்கள், இயேசுவின் நாமத்திற்குரிய நிந்தையை சுமக்க பாத்திரராக கண்டபடியால், அவர்கள் அவருடைய நாமத்திற்குரிய நிந்தையை சுமக்க முடிந்ததை மிகுந்த சந்தோஷத்தோடு களிகூர்ந்தனர். 238 இன்றைக்கு அநேக ஜனங்கள், அவர்களை பரிசுத்த உருளை என்று அழைக்க நேர்ந்தால், அவர்கள் தலை கவிழ்ந்து அடங்கிப்போய், "என்னே! நான் ஒருக்கால் துவக்கத்திலுருந்தே தவறாயிருந்திருக்கலாம்" என்று கூறிவிடுவார்கள். ஆனால் அவர்களோ, "ஓ என்னே, அந்த நாமத்தின் நிந்தையை சுமப்பதைக் குறித்து சந்தோஷமடைந்தனரே!" 239 இப்பொழுது இரண்டாம் நூற்றாண்டில், அவர்கள் "சிலுவையை முதுகில் சுமந்தவர்கள்" என்று அழைக்கப்பட்டனர். அப்பொழுதான் கிறிஸ்தவர்கள் தாங்கள் கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்பட்டனர் என்பதை காண்பிக்கும்படியாக தங்களுடைய முதுகில் சிலுவையைச் சுமந்தனர். எனவே அவர்கள் முதுகில் சிலுவையை சுமந்தவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இப்பொழுது கத்தோலிக்கர்கள் தங்களை அந்தவிதமாக அழைத்துக்கொள்கிறார்கள் என்பதை நான் அறிவேன், ஆனால் அது கத்தோலிக்க சபையாயிருக்கவில்லை. அது பிராட்டெஸ்டென்ட் சபை என்று அழைக்கப்படுவதற்கு முன்பிருந்த பிராட்டெஸ்டென்ட் சபையாகும். அது பாவத்தைத் தவிர வேறெதையும் கண்டனம் செய்யவில்லை. அது இன்றைக்கு பிராட்டெஸ்டென்ட் சபை என்று அழைக்கப்படுவதற்கு காரணமென்னவெனில் அது கத்தோலிக்க கொள்கையை எதிர்த்த காரணத்தினாலேயாகும். ஆனால் அது ஒரு... அவர்கள் சிலுவையை முதுகில் சுமந்தவர்கள் என்று அழைக்கப்பட்ட போது, அது எந்த கோட்பாட்டையும் அந்த நேரத்தில் சாரத குழுவினராக அவர்கள் இருந்து வந்தனர். 240 ஜோசிபஸின் சரித்திரம், மற்றும் மற்ற எழுத்தாளர்களின் சரித்திரம், ஈஸ்லப்பினுடைய இரு பாபிலோன்கள் போன்றவற்றை படித்துப் பார்ப்பீர்களேயானால், அது உண்மை என்பதையும், அப்பொழுது அவர்கள் எந்த ஒரு சபையாயும் ஸ்தாபிக்கப்படவில்லை என்பதையும் கண்டடைவீர்கள். கடைசி அப்போஸ்தலன் மரித்து, கிட்டத்தட்ட முன்னூறு ஆண்டுகள் கழித்தே முதல் கத்தோலிக்க சபையானது ஸ்தாபிக்கப்பட்டது. ஏறக்குறைய முன்னூறு ஆண்டுகள் கழித்தே, கத்தோலிக்க சபையானது ஸ்தாபிக்கப்பட்டது. அப்பொழுதே உபத்திரவம் துவங்கி, ஜனங்கள் கத்தோலிக்க சபைக்குள்ளாக் கொண்டு வரப்பட பலவந்தம்பண்ணப்பட்டனர். அவர்கள் சபையையும் அரசியலையும் இணைத்திருந்தனர். 241 அதன்பின்னர் அது என்னவென்று அழைக்கப்பட்டதென்றால், அது அஞ்ஞான மார்க்கத்திலிருந்து கத்தோலிக்க மார்க்கத்திற்கு மாறுவதற்காக கான்ஸ்டான்டைனின் மூலம் ஏற்பட்ட மதமாற்றம் என்று அழைக்கப்பட்டது. ஆனால் எவரேனும் எப்போதாவது அவனுடைய சரித்திரத்தை வாசித்துப் பார்ப்பீர்களேயானால், அவன் மதமாற்றமடையவேயில்லை என்பதையும், அவன் செய்த காரியங்களையும் அறிந்து கொள்வீர்கள். ஓ என்னே! மத சம்மந்தமாக அவன் செய்த ஒரே காரியம் என்னவென்றால், பரிசுத்த சோபியா சபையின் மேல் ஒரு சிலுவையை நட்டுவைத்து, அவன் பக்தியுள்ளவனைப்போல நடித்தான். அவன் ஒரு-ஒரு கேடானவனாயிருந்தான். ஆனால் அவர்களோ அதை அவனுடைய மதமாற்றம் என்று அழைக்கிறார்கள். இன்றைக்கு மதமாற்றம் என்று போலியாக அழைக்கப்படுகிறவற்றோடு கிட்டத்தட்ட ஒப்பிட்டுப் பாருங்கள். 242 இப்பொழுது, ஆனால் பவுல் மனமாற்றமடைந்தபோது, அவன் இந்த உண்மையான அனுபவத்தை உடையவனாயிருந்தான் என்பதையும், அவன் முற்றிலுமாய் திருப்பப்பட்டிருந்தான் என்பதையும் நாம் கண்டறிகிறோம். மதமாற்றம் என்பதோ "திருப்பப்படுதல்" என்பதாகும் என்பதை நீங்கள் அறிவீர்கள். அதாவது நீங்கள் இந்த வழியாய் சென்று கொண்டிருக்கும்போது, நீங்கள் திரும்பி மீண்டும் வேறு வழியாய் செல்லத் துவங்குவதாகும். ஆம் ஐயா, அது கிட்டத்தட்ட வேறு பக்கமாக திரும்புவதாகும். 243 பவுல் மனமாற்றமடைந்தவுடன், அவன் தன்னுடைய அனுபவத்தை கூற முடிந்ததற்கு முன்பு..... இப்பொழுது அவன் ஒரு ஆச்சரியமான அனுபவத்தை உடையவனாயிருந்தான். இப்பொழுது நீங்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும்போது, உங்களுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளும் போது, அது ஒரு அனுபவமாயிருக்கிறது என்று நான் நம்புகிறேன். உங்களுடைய பாவம் மன்னிக்கப்பட்டிருக்கிறது என்று அறிந்து கொள்ளுகிற சந்தோஷமானது உங்களுடைய இருதயத்தினூடாக சிலிர்ப்பூட்டுகிறது என்று நான் நம்புகிறேன். 244 ஆனால் அதன்பின்னர் அந்த ஆசீர்வதிக்கப்பட்ட பரிசுத்த ஆவியானவர் வருகின்றபோது, அது ஒரு அனுபவத்தை, அந்த புதிய பிறப்பை, நீங்கள் ஒருபோதும் மறக்க மாட்டீர்கள். நீங்கள் ஒரு தேவனுடைய பிள்ளையாகிவிட்டீர்கள். இங்கே அதைத்தான் அது செய்கிறது. "சகோதரன் பிரான்ஹாம், நீங்கள் அதை எப்படி அறிவீர்கள்?" என்று கேட்கலாம். 245 இப்பொழுது இவைகள் போதனைப் பாடங்களாய் இருக்கின்றன. அநேக ஜனங்கள், மெத்தோடிஸ்டுகள், "அவர்கள் சத்தமிடும்போது, அதைப் பெற்றுக்கொண்டோம்" என்று கூற முயற்சிக்கிறார்கள். அது நல்லது தான், பரவாயில்லை , நீங்கள் அதைப் பெற்றுக்கொண்டதால், சத்தமிட்டீர்கள், சரி. நீங்கள் சத்தமிட்ட காரணத்தால், நீங்கள் அதைப் பெற்றிருந்தீர்கள் என்பது ஒரு அடையாளமாயிருக்கவில்லை. ஏனென்றால் ஏராளமானோர் சத்தமிட்டும், அதைப் பெற்றுக் கொள்ளவில்லை. 246 பெந்தேகோஸ்தேக்களோ, "அவர்கள் அந்நிய பாஷையில் பேசின போது, அவர்கள் அதைப் பெற்றுக் கொண்டனர்" என்றனர். சரி, நீங்கள் அந்நிய பாஷையில் பேசி, அதைப் பெற்றுக் கொண்டிருந்தால், சரி. ஆனால் உங்களால் அந்நிய பாஷைகளில் பேச முடிந்தும், அதை இன்னமும் பெற்றுக் கொள்ளாமலிருக்கிறீர்களே. அப்படித்தானே? 247 ஆகையால் நீங்கள் பாருங்கள், அது அனைத்திற்கும் மாறாக மரணத்திலிருந்து ஜீவனுக்குட்படும் அனுபவமாயிருக்கிறது. பழைய காரியங்கள் யாவும் மரிக்கும்போது, எல்லாக் காரியங்களுமே புதியதாகின்றன. அப்பொழுது கிறிஸ்து உங்களுக்கு மெய்யானவராகிறார். பழைய காரியங்கள், பழைய மாம்சப்பிரகாரமான வேர்கள் ஒழிந்து போகின்றன. எப்படி ஒரு வேரைத் தோண்டியெடுக்க வேண்டும் என்று உங்களுக்குத் தெரியுமா? நாம் வழக்கமாக ஒரு தோண்டியெடுக்கும் களைப் பிடுங்கியை எடுத்து, அதைப் பிடுங்கி, அந்த வேரில் சிறிதும் விட்டுவிடாமல் தோண்டி பிடுங்கிவிடுவோம். அவர்கள், "கசப்பான யாதொரு வேராவது உங்களுக்குள்ளாக முளைத்தெழும்பினால், அதைப் பிடுங்கி எறியுங்கள்" என்றனர். அது உண்மையே. அதைத்தான் பரிசுத்த ஆவியானவர் செய்கிறார். எல்லா வேர்களையும் வேரோடு அழிக்கிறார். அவைகளைத் தோண்டியெடுத்து, அவைகளைக் குவித்து வைத்து, சுட்டெரித்துப் போடுங்கள். அவைகளை அழித்து அகற்றுங்கள். நீங்கள் அதைச் செய்வீர்களேயானால், அப்பொழுது நீங்கள் ஒரு நல்ல விளைச்சலைப் பெறுவீர்கள். 248 இப்பொழுது, ஏதோக்காரியம் சம்பவித்தது என்பதை பவுல் அறிந்திருந்தான். ஆகையால் அவன் அரேபியாவிற்கு திரும்பிச் சென்று, மூன்று வருடங்கள் பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் எல்லோரையுங் குறித்தும், அவர்கள் எப்படி தீர்க்கதரிசனம் உரைத்தனர் என்பதைக் குறித்தும் ஆய்ந்துப் படித்தான். பின்னர் அது முற்றிலும் உண்மையாயிருந்தது என்பதை அவன் கண்டறிந்தான். 249 இப்பொழுது, பாருங்கள், விடிவெள்ளி நட்சத்திரம் அங்கே பிரசன்னமானதைக் குறித்தும், அந்த மகத்தான ஒளி இறங்கி வந்து, முன்னறிவித்து, சம்பவிக்கப்போகிற காரியங்களைக் காண்பித்ததையுங் குறித்து இங்கே இந்த சிறிய சபையில் நமக்கு உண்டாயிருந்த இந்த அனுபவத்தை இன்றைக்கு அதனோடு ஒப்பிட்டுப் பாருங்கள். அது அற்புதமானது என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் என்னுடைய ஊழியக்கார சகோதரரோ என்னிடத்தில், "அது பிசாசினுடையது" என்று கூறினார். அப்பொழுது என்னால் என்னால் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. 250 எனவே ஒரு இரவு இந்தியானாவில் உள்ள கிரீன் மில்லில், கர்த்தருடைய தூதன் நடந்து வந்து தரையிலே நின்று அங்கே அதை வேதவாக்கியத்தின் மூலம் நிரூபித்தபோது, எனக்கு உண்டாயிருந்த அந்த அனுபவத்தை நான் பெற்றுக் கொள்ளும் வரையில், நான் அதைக் குறித்து ஒன்றையுமே கூறவில்லை. அப்பொழுதே அது அனல் மூண்டது. அப்பொழுதிலிருந்து அது பரவத் துவங்கினது. 251 அண்மையில் கடந்த ஞாயிறு மேயோ சிறப்பு மருத்துவர்களால், அந்த மனிதனுடைய சரீர கட்டுப்பாட்டு நரம்பு செயலிழந்துவிட்டது என்றும், இனி ஒன்றுமே செய்ய முடியாது என்றும் கூறிவிட்ட நடக்க முடியாமலிருந்த... ஒரு மனிதனை இயேசு கிறிஸ்து எடுத்து நிகழ்த்தின் பிழையற்ற அடையாளங்களை நாம் கண்டோம். குருடாய் அமர்ந்திருந்து, பின்னர் எழும்பி, கட்டிடத்தை விட்டு எழும்பி நடந்து, தன்னுடைய சக்கர நாற்காலியை படிகட்டுகளில் தள்ளிக்கொண்டு நடக்கவும், மற்ற எவரையும் போல அவரால் காணவும் முடிந்தது. அது உயிர்த்தெழுந்த கர்த்தராகிய இயேசுவின் வல்லமையாயிருக்கிறது என்பதையேக் காண்பிக்கிறது. அங்குதான் காரியமே உள்ளது. அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். 252 நாம் பெற்றுள்ள இந்த மகத்தான அனுபவத்தை அவருடைய வேதாகமத்தோடும், வாக்குத்தத்தங்களோடும் ஒப்பிட்டுப் பார்க்கும்படிக்கு தேவன் இதை ரூபகாரப்படுத்தியிருக்கிறார் என்பதை இன்றிரவு அறிந்துள்ள ஒரு மகிழ்ச்சியான குழுவாய் நாம் இருக்கிறோமல்லவா? ஆகையால் நாம் மிகுந்த சந்தோஷமுடையவர்களாயிருக்க வேண்டும். அது 2-ம் அதிகாரத்தில் உள்ளதை நாம் தெளிவாக புரிந்து கொள்கிறோம். எனவே, "நாம் இந்தக் காரியங்களை விட்டுவிடக் கூடாது என்றும்... நாம் இந்தக் காரியங்களைக் குறித்து கவலையற்றிருக்கக் கூடாது" என்பதையும் நாம் கண்டறிகிறோம். நாம் அந்தக் காரியங்களை பற்றிக் கொண்டிருக்க வேண்டும். ...இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக் குறித்து நாம் கவலையற்றிருப்போமானால், தண்டனைக்கு எப்படி தப்பித்துக் கொள்வோம்... 253 நாம் நியாயத்தீர்ப்பில் நிற்கும்போது, தேவனுடைய வார்த்தையின் ஒளியில் நாம் என்ன செய்யப்போகிறோம்? நீங்கள், "நான் எந்த வித்தியாசத்தையும் ஒருபோதும் அறியேன்" என்று கூற முடியாது. ஓ, ஆம். உங்களுக்கு தெரிந்துள்ளது. "நல்லது, இப்பொழுது, சகோதரன் பிரான்ஹாம் தவறாயிருக்கக் கூடும்" எனலாம். அது உண்மை . ஆனால் தேவன் தவறாயில்லையே. அவருடைய வார்த்தை தவறாயில்லையே. அதேக் காரியத்தைக் குறித்து சற்று சிந்தித்துப் பாருங்கள். அப்போஸ்தலர்களுக்குள் ஒரு காலத்தில் ஜீவித்த அந்த வேதம் மீண்டும் ஜீவித்துக் கொண்டிருக்கிறது. ஓ, கர்த்தருடைய நாமம் ஸ்தோத்தரிக்கப்படுவதாக! 254 எனக்கு நாற்பத்தியெட்டு வயதாகிறதையும், கிட்டத்தட்ட ஐம்பதை நெருங்குகிறதையும் நான் எண்ணிப் பார்க்கும்போது, என்னுடைய வாலிப நாட்கள் போய்விட்டன. நான் ஒரு சிறு பையனாயிருந்தது முதற்கொண்டே இந்த ஆசீர்வதிக்கப்பட்ட வாக்குத்தத்தை அறிந்து, அதை என்னுடைய சகோதர சகோதரிகளுக்கு அறிவித்திருக்கிறேன். உண்மையில் ஆயிரக்கணக்கானோர் அந்தகாரத்திலிருந்து வெளியே வந்துள்ளதையும், நாம் அந்த ஆசீர்வதிக்கப்பட்ட நம்முடைய நித்திய வீட்டிற்கு சென்று கொண்டிருக்கிறோம் என்பதை அறிந்து கொள்வதையும் கண்டிருக்கிறேன். நான் பிரசங்கித்து முடிப்பதற்கு முன்னரே, "இந்த பூமிக்குரிய கூடாரம் அழிந்து போனாலும், அவ்விடத்திலே ஒன்று காத்துக் கொண்டிருக்கிறது." அல்லேலூயா! டஜன் கணக்கான ஜனங்கள் இங்கே அமர்ந்துள்ளதை அறிவேன், அதாவது அவர்கள் இந்த ஜீவனை இப்பொழுது இழந்துவிட்டாலும், அவர்களுடைய சரீரத்தை நாம் அடக்கம் செய்பவரிடத்தில் கொண்டு செல்லும் முன்பு, அவர்களோ அப்பாலுள்ள அவ்விடத்தில் அந்த மகிமையான சரீரத்தில் இருந்து கொண்டு, தேவனுடைய பரிசுத்தவான்களோடு களிகூர்ந்து கொண்டிருப்பர், என்றென்றைக்கும் ஜீவிக்கும்படியான் தேவனுடைய பிரசன்னத்தில் ஏற்கெனவே இருப்பர். அது அவ்வண்ணமான பரிபூரண, முற்றிலுமான ரூபகாரப்படுத்துதலாயிருக்கிறதே! ஆமென். 255 ஓ, அது அந்த பிரஸ்பிடேரியனைச் சத்தமிட்டுச் செய்யுமே! அது சன்டே என்பவரையும் அவ்வாறு செய்ததல்லவா? (சபையோர், "ஆமென்" என்கின்றனர். ஆசி.) அந்த ஜனங்கள் பிரஸ்பிடேரியன்களாயிருந்தனர். நிச்சயமாகவே சிந்திக்கச் செய்யும். ஓ, ஜனங்கள் உணர்ச்சிவசப்படுதுவதில் வியப்பொன்றுமில்லையே! ஏன், ஒரு பந்தினை அடிப்பதிலோ அல்லது ஒரு கூடைப் பந்தாட்ட கூடையில் எறிவதிலோ நீங்கள் உணர்ச்சிவசப்படுவீர்களேயானால், நீங்கள் மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறீர்கள் என்றும், நீங்கள் கிறிஸ்துவுக்குள் ஒரு புதிய சிருஷ்டியாயிருக்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்வது உங்களை எவ்வளவு அதிகமாக உணர்ச்சிவசப்படச் செய்யும்? உங்களுடைய ஆவி உங்களை துர்குணத்திலிருந்தும், கபடத்திலிருந்தும், பகைமையிலிருந்தும், உலகத்தின் எல்லாக் காரியங்களிலிருந்தும் விலக்கி வழி நடத்துவதன் மூலம் நீங்கள் அதை அறிந்துகொள்ளுகிறீர்கள். உங்களுடைய இருதயமோ கிறிஸ்துவின் மேல் ஒருமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. அதுவே உங்களுடைய நோக்கங்களாகும். அப்பொழுது அதைத்தான் நீங்கள் உங்களுடைய சிந்தையில், உங்களுடைய இருதயத்தில் இரவும் பகலும் சிந்திப்பீர்கள். நீங்கள் இரவிலே படுக்கைக்கு செல்லும்போது, உங்களுக்கு பின்னால் உங்களுடைய கரங்களை இந்த விதமாக வைத்துக் கொண்டு, அங்கேயே படுத்துக் கொண்டு, உங்களுக்கு நித்திரை வரும்வரை அவரை ஸ்தோத்தரிப்பீர்கள். மீண்டும் காலையில் எழுந்ததும் அவரை ஸ்தோத்தரிப்பீர்கள். ஆமென். ஓ, என்னே! 256 நான் அவரைத் துதிக்க முயற்ச்சித்துள்ளேன். ஒவ்வொரு நாள் காலையும் சகோதரன் உட்ஸ் அவர்களும் நானும் கிட்டத்தட்ட அதிகாலையில் நான்கு மணிக்கே எழுந்து அணில் வேட்டையாட வெளியே செல்கிறோம். நான் ஒவ்வொரு மரத்தின் கீழும் அவரை ஸ்தோத்தரிக்கிறேன். நான் அவ்வாறு செய்துவருகிறேன் என்று நான் நினைக்கிறேன். என்னால் அவரை ஸ்தோத்தரிக்காமல் எந்த ஒரு மரத்தையுமே காண முடியவில்லை. நினைத்துப் பாருங்கள், அவரே அந்த மரத்தை வளர்த்தார். ஒரு சிறிய வெட்டுக்கிளி மேலே பறப்பதைக் காண்கிறேன். அவர் அந்த வெட்டுக்கிளியை அறிந்திருக்கிறார். "ஓ" நீங்களோ, "சகோதரன் பில், அர்த்தமற்றது" என்று கூறலாம். ஓ, இல்லை , அதுவல்ல, அவர் ஒவ்வொரு அணிலும் எங்கே உள்ளது என்பதை அறிந்திருக்கிறார். அவர் ஒவ்வொரு வண்ணத்துப் பூச்சியும் எங்கே உள்ளது என்பதை அறிந்திருக்கிறார். 257 ஏன், ஒரு சமயம், அவருக்கு கொஞ்சம் பணம் தேவைப்பட்டது, அப்பொழுது அவர், "பேதுருவே, அங்கு ஒரு மீன் உள்ளது, சற்று முன்புதான் அது ஒரு வெள்ளிப் பணத்தை விழுங்கினது, அந்த நாணயம் நம்முடைய தேவைக்கு போதுமானதாயிருக்கிறது. எனவே நீ அங்கே போய் தூண்டிலை போடு, நான் அந்த மீனை அங்கு அனுப்புவேன். அப்பொழுது அந்த மீனுடைய வாயிலிருந்து அந்த வெள்ளிப் பணத்தை எடுத்துக்கொள், ஏனென்றால் அந்த மீனால் அதை உபயோகப்படுத்த முடியாது. எனவே அதைக் கொண்டுபோய் நம்முடைய தசமபாகத்தையும், வரிப்பணத்தையும் அவனுக்கு செலுத்திவிடு" என்றார். ஆமென். 258 சில வாரங்களுக்கு முன்னர் ஒரு சிறு மீன் கொல்லப்பட்டு, தண்ணீரில் கிடப்பதைக் கண்டேன். அதனைக் குறித்த நிகழ்ச்சியை நீங்கள் எல்லோரும் கேட்டிருக்கிறீர்கள். சகோதரன் உட்ஸ் அவர்களும், அவருடைய சகோதரனும் இங்கே அதற்கு சாட்சிகளாயிருக்கிறார்கள். அந்த சிறிய மீன் தண்ணீரின் மேல் அரைமணி நேரமாக அதனுடைய வாய்வழியாக குடல்கள் எல்லாம் வெளியே இழுக்கப்பட்டு மிதந்து கொண்டிருந்தது. அப்பொழுது மகத்தான பரிசுத்த ஆவியானவர் இது சம்பவித்ததற்கு முந்தின நாள் வீசுகிற காற்றில் வந்து, "நீங்கள் ஒரு சிறு மிருகத்தின் உயிர்த்தெழுதலைக் காணப்போகிறீர்கள்" என்றார். அதற்கு அடுத்த நாள் காலையில் கிட்டத்தட்ட சூரியன் உதித்தெழும்பின சற்று நேரத்தில் இவ்வளவு நீளம் கொண்ட அந்த சிறிய மீனை நாங்கள் கண்டோம். அப்பொழுது கர்த்தருடைய ஆவியானவர் அங்கு வந்து, "சிறு மீனே, இயேசு கிறிஸ்து உன்னை முழுவதும் சொஸ்தமாக்குகிறார்" என்று கூறினார். அப்பொழுது மரித்து போய், கிட்டத்தட்ட அரைமணி நேரமாய் தண்ணீரில் மிதந்து கொண்டிருந்த அந்த மீன் உயிர் பெற்று, அதனால் முடிந்தளவு வேகமாக நீந்தி தண்ணீருக்குள் சென்றுவிட்டது. ஓ, கர்த்தருடைய நாமம் ஸ்தோத்தரிக்கப்படுவதாக. அவர் எவ்வளவு அற்புதமானவராய் இருக்கிறார்! 259 பவுல், "அவர் மெல்கிசேதேக்கின் முறைமையில் இருந்தார்" என்று கூற முடிந்ததில் வியப்பொன்றுமில்லையே, அவர் மெல்கிசேதேக்காய் இருந்தார். மெல்கிசேதேக்கிற்கு நாட்களின் துவக்கம் இல்லாதிருந்தது. அவருக்கு வருடங்களின் முடிவும் இல்லாதிருந்தது. அவருக்கு ஜீவனின் துவக்கமும் ஜீவனின் முடிவும் இல்லாதிருந்தது. அவருக்கு தகப்பனும் தாயும் இல்லாதிருந்தது. ஆகையால் அவர் வேறுயாராகவும் இருந்திருக்க முடியாது. அவர் எப்போதும் யாராய் இருந்தாரோ, அவர் அப்படியே இன்றிரவும் உயிரோடிருக்கிறார். ஆகையால் அவர் ஒருவரே நித்திய ஜீவனின் மாதிரியாய் இருக்கிறார். அது தேவனைச் சார்ந்ததாய் உள்ளது. 260 கடந்த மாலை நாங்கள் ஒரு கலந்துரையாடலில் இருந்து கொண்டிருந்தபோது, தேவனுடைய திரித்துவத்தை ஒரு சகோதரனால் புரிந்துகொள்ளமுடியவில்லை. நாங்கள் எப்படியாய் அதைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்தோம். எப்படி இயேசு ஏறக்குறைய முப்பது வயது நிரம்பிய ஒரு மனிதனாய் அங்கே நின்றார். அவர் கூறினதோ... அவர்கள், "ஓ, எங்கள் பிதாக்கள் வனாந்திரத்தில் மன்னாவைப் புசித்தார்கள்" என்றனர். 261 அப்பொழுது அவரோ, "அவர்கள் ஒவ்வொருவரும் மரித்தார்களே" என்றார். ஆனால் அவர், "நானே தேவனிடத்திலிருந்து, வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம், இதைப் புசிக்கிற மனிதன் மரிப்பதில்லை " என்றார். 262 அவர்கள், "ஓ," "எங்கள் பிதாக்கள் வனாந்திரத்தில் இருந்த அந்தக் கன்மலையிலிருந்து வந்த தண்ணீரைக் குடித்தார்கள்" என்றனர். 263 அதற்கு அவரோ, "நானே அந்தக் கன்மலை" என்றார். முப்பது வயதுடைய ஒரு மனிதன். மேலும் அவர், "ஆபிரகாம் என்னுடைய நாளைக் கண்டு களிகூர்ந்தான்" என்றார். 264 அதற்கு அவர்களோ, "ஏன்?'' என்றும், "நீர் ஆபிரகாமைப் போல வயதானவர் என்று எங்களிடத்தில் இப்பொழுது கூறுகிறீரா? உனக்கு இன்னும் ஐம்பது வயதாகவில்லையே, எண்ணூறு வருடங்களுக்கு முன்னர் மரித்துப்போன ஆபிரகாமை நீர் கண்டதாக கூறுகிறீரா? இப்பொழுது உமக்கு பிசாசு பிடித்துள்ளது என்பதை நாங்கள் அறிவோம். நீர் பைத்தியம் பிடித்தவராயிருக்கிறீர்" என்றனர். அந்தவிதமாகத்தான். அந்தவிதமாகத்தான் ஒரு பிசாசு என்பது, "பைத்தியம் பிடித்த நபர்" என்று பொருள்படுகிறது. அவர்கள், "உனக்கு பிசாசு பிடித்து விட்டது, நீ பைத்தியக்காரன்" என்றனர். 265 அதற்கு அவரோ, "ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன்" என்றார். 266 அந்த விதமாகத்தான் அவர் இருந்தார். அவர் வெறுமென ஒரு மனிதனாகவோ அல்லது அவர் ஒரு தீர்க்கதரிசியாகவோ இருக்கவில்லை . அவர் தேவனாயிருந்தார், தேவன் பூமியிலே இயேசு என்றழைக்கப்பட்ட ஒரு மாம்ச சரீரத்தில் வாசம் செய்த மனு உருவெடுத்த தேவ குமாரனாய் இருந்தார். அந்த விதமாகத்தான் சரியாக அவர் இருந்தார். 267 நாம் இப்பொழுது இங்கே இந்த 2-ம் அதிகாரத்தின் முடிவில் உள்ள கடைசி பாகத்தில் அவரைக் கண்டறிகிறோம். அதில் நான் 16-வது வசனம் இல்லை 15-வது வசனத்திலிருந்து வாசிக்க விரும்புகிறேன். ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற் குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார். அதைத்தான் இயேசு செய்தார் என்றும், அதாவது ஜீவகாலமெல்லாம் மரண பயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார் என்று பவுல் கூறினான். 268 இப்பொழுது மரணத்தின் பயமே தேவையில்லை. இப்பொழுது உண்மையாகவே, நாம் மரிக்கிறோம், நம்மில் எவருமே மரணத்தை விரும்புகிறதில்லை, நாம் அதை மரணம் என்று அழைக்கிறோம். ஆனால் ஒரு நபர் மீண்டும் பிறந்தால், அவனால் மரிக்க முடியாது என்பது உங்களுக்குத் தெரியுமா?[சபையோர், "ஆமென்" என்கின்றனர்.ஆசி.) எப்படி ஒருவன் நித்திய ஜீவனைப் பெற்று, அதன்பின்னர் மரிக்க முடியும்? அவனால் மரிக்க முடியாது. மரணம் என்ற அந்த ஒரு காரியம், அதாவது மரணம் என்ற வார்த்தையின் பொருள் என்னவென்றால் "பிரிவினை" என்பதாகும். இப்பொழுது அவன் நம்முடைய கண்பார்வையிலிருந்து பிரிக்கப்படுவான். ஆனால் அவன் எப்பொழுதுமே தேவனுடைய பிரசன்னத்தில் இருக்கிறான், அவன் எப்பொழுதுமே இருப்பான். ஆகையால் மரணம் ஒரு கடினமான காரியம் அல்ல. மரணம் ஒரு மகிமையான காரியமாய் உள்ளது. மரணம் நம்மை தேவனுடைய பிரசன்னத்திற்குள்ளாக கொண்டு செல்கிறதாயிருக்கிறது. 269 ஆனால் இப்பொழுது, உண்மையாகவே, நாம் மானிடர்களாயிருக்கின்றபடியால் இங்குள்ள இந்த இருளான மூலக் கூறுகளில் நடக்கிறோம். நாம் நாம் அதைப் புரிந்துகொள்ள வேண்டியபிரகாரம் புரிந்துகொள்ளுகிறதில்லை. உண்மையாகவே சுவாசத் தடையான மரண வேதனை உண்டாகிற போது, அது நம்முடைய பரிசுத்தவான்களையும் பயப்படச் செய்து இழுக்கிறது. அது தேவ குமாரனையே, "இந்தப் பாத்திரம் நீங்கக் கூடுமோ?" என்று கூறும்படிச் செய்தது. அது ஒரு பயங்கரமான காரியமாய் உள்ளது. அதைத் தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம். ஏனென்றால் நாம்... அது ஒரு பாவத்தின் தண்டனையாய் உள்ளது, அது மரணமாய் உள்ளது. அது பயங்கரமானதாயிருக்க வேண்டியதாயுள்ளது. ஆனால் நாம் காலத்தின் திரைக்கப்பால், அது எங்கே உள்ளது என்பதை நோக்கிப் பார்க்கக் கூடுமானால் நலமாயிருக்குமே, கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக! காலத்தின் திரைக்கப்பால் உள்ளதையே, அங்கேயே மனிதன் இன்றிரவு நோக்கிப் பார்க்க வாஞ்சிக்கிறான். குட்டி அன்னாள் மேயி ஸ்நெல்லிங் என்பவளும், மற்றவர்களும், "கர்த்தாவே, நான் காலத்தின் திரைக்கப்பால் கடந்து நோக்கிப் பார்க்கட்டும்" என்ற ஒரு பாடலை இங்கே வழக்கமாக பாடுவதுண்டு. ஒவ்வொருவரும் அதைக் காண விரும்புகின்றனர். 270 இப்பொழுது நாம் இங்கே 16-ம் வசனத்தில் இருக்கிறோம். "ஆதலால், அவர்... கைகொடாமல்...'' ஆதலால், அவர் தேவதூதருக்கு உதவியாகக் கைகொடாமல், ஆபிரகாமின் சந்ததிக்கு உதவியாகக் கைகொடுத்தார். 271 ஓ, நாம் அதை இப்பொழுது மீண்டும் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறோம். இப்பொழுது நாம் சரியாக வந்து கொண்டிருக்கிற... இந்த 3-ம் அதிகாரத்தின் முதல் பாகம், அதனுடைய கடைசி பாகம், அது வருகின்ற ஞாயிற்றுகிழமைக்கான பாடமான, "ஒய்வு நாளுக்கான அந்த நாள்" என்பதன் பேரில் இணைகிறது. 272 இப்பொழுது கவனியுங்கள் ....அவர் தேவதூதருக்கு உதவியாக கைகொடாமல்... இப்பொழுது "அவர்" யாராயிருக்கிறார்? அவன் யாரைக் குறித்து பேசிக்கொண்டிருக்கிறான்? கிறிஸ்துவையே. கிறிஸ்து யாராயிருக்கிறார்? தேவனாய், தேவனுடைய, தேவனுடைய லோகாஸாயிருக்கிறார். 273 இப்பொழுது நீங்கள் இதை நிச்சயமாகவே புரிந்து கொள்ளும்படிக்கு நான் இதை மீண்டும் விளக்கிக் கூறட்டும். தேவன் மூன்று தேவர்களாய் இருக்கவில்லை. தேவனின் திரித்துவம் ஒன்றாயிருக்கிறது. பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்பது மூன்று வித்தியாசமான தேவர்களைப் பொருட்படுத்துகிறதில்லை. அது அவ்வாறாயிருந்தால், நாம் அஞ்ஞானிகளாயிருப்போம். அந்தக் காரணத்தினால்தான் யூதர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. அது ஒருபோதும் வேதத்தில் கற்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை. இப்பொழுது அது முழுமையாக கத்தோலிக்க சபையில் கற்பிக்கப்பட்டுள்ளது, அங்கிருந்துதான் திரித்துவ ஞானஸ்நானம் தோன்றினது. 274 ஆப்பிரிக்காவில் அவர்கள் உங்களுடைய முகத்தை முன்னோக்கியவாறு மூன்று முறை முழுக்கி ஞானஸ்நானம் கொடுக்கின்றனர்: பிதாவாகிய தேவனுக்காக ஒரு முறை; குமாரனாகிய தேவனுக்காக ஒருமுறை; பரிசுத்த ஆவியாகிய தேவனுக்காக ஒருமுறை; இப்பொழுது, அது தவறானது. அதைக்குறித்த அப்படிப்பட்ட போதனைகளே வேதத்தில் கிடையாது. புரிகிறதா? 275 இப்பொழுது, அந்த விதமாகத்தான் அவர்கள் கற்பித்தனர். அது லூத்தரினூடாக வந்து, பின்னர் லூத்தரிலிருந்து வெஸ்லிக்குப் போய், தொடர்ந்து காலங்களினூடாக வந்துகொண்டிருந்தது. ஆனால் அது ஒருபோதும் ஒரு வேத போதனையாயிருந்ததேயில்லை. அது துவங்கினது முதற்கொண்டே, அது ஒரு பிழையாகவே இருந்து வந்துள்ளது. 276 இப்பொழுது, ஆகையால் தேவன் ஆதியில் இருந்தார். எந்த வெளிச்சமும் உண்டாவதற்கு முன்னே, எந்த ஒரு அணுவும் உண்டாவதற்கு முன்னே, எந்த ஒரு நட்சத்திரமும் உண்டாவதற்கு முன்னே, காணக் கூடிய எந்த ஒரு காரியமும் உண்டாவதற்கு முன்னே, தேவன் எல்லா வெற்றிடத்தையும் நிரப்பியிருந்தார். அதில் தூய்மையைத் தவிர வேறொன்றும் இருந்ததில்லை; தூய்மையான அன்பு, தூய்மையான பரிசுத்தம், தூய்மையான நீதியே இருந்தது. அது ஆவியாய் இருந்தது. அவர் நித்தியத்திலிருந்து முழு வெற்றிடத்தையும் மூடி மறைத்திருந்தார். அங்கே நம்மால் அதனுடைய எல்லையைக் கண்டறிய முடியாது. அதுவோ நம்மால் கற்பனை செய்து பார்க்கக் கூடிய எந்த ஒரு காரியத்திற்கும் அப்பால் செல்கிறது. 277 நாம் அந்தத் தூரதரிசினி கண்ணாடியினூடாக நோக்கிப் பார்போமேயானால், அப்பொழுது நம்மால் கோடிக்கணக்கான ஒளி ஆண்டுகளைக் காண முடியும். அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். கோடிக்கணக்கான ஒளி ஆண்டுகள். ஒளியானது - ஒளியானது கிட்டத்தட்ட ஒரு விநாடிக்கு எட்டாயிரம் மைல் வேகத்தில் பிரயாணஞ்ச் செய்கிறது. கோடிக்கணக்கான ஒளி ஆண்டுகள்... அது எத்தனை கோடிக்கணக்கான மைல்களாயிருக்கும் என்பதை சிந்தித்துப் பாருங்கள். எனவே உங்களால் அதை எண்ணிப் பார்த்து கணக்கிடக் கூட முடியாது. நீங்கள் ஜெபர்ஸன்வில்லைச் சுற்றிலும் வரிசையாக சங்கிலியைப் போன்று ஒன்பது என்ற எண்ணை எழுதிக் கொண்டே போனாலும், உங்களால் அந்த மைல்களை எண்ணிப்பார்த்து கணக்கிட முடியாது. அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். அதற்கு இன்னும் அப்பால் நட்சத்திரங்களும் கிரகங்களும் உள்ளன. அவைகளில் எந்த ஒன்றும் உண்டாயிருப்பதற்கு முன்னமே அவர் தேவனாயிருந்தார். புரிகிறதா? 278 இப்பொழுது தேவனிடத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற அந்த லோகாஸ், அது லோகாஸாய், இது ஒரு-ஒரு சரீர வடிவில் உருவாகத் துவங்கினது. இந்த சரீர வடிவமே வேதபண்டிதர்களின் போதனைகளில் தேவனிடத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற லோகாஸ் என்று அழைக்கப்பட்டது. வேறு வார்த்தைகளில் கூறினால், அதற்கான ஒரு மேலான வார்த்தையில் கூறினால், நாம் அதை ஒரு ஆவிக்குரிய சரீரம் என்று அழைக்கிறோம். (மகிமைபடுத்தப்பட்ட ஒரு மானிட சரீரமே ஆவிக்குரிய சரீரமாய் உள்ளது.) சரியாக மாம்சமும், இரத்தமும் இருப்பது போன்றில்லாமல், அது அதனுடைய மகிமையடைந்த நிலையில் இருக்கும், ஆனால் அது மானிட சரீரத்தின் ரூபத்தில் இருந்தாலும் புசிக்காது, அது தண்ணீர் குடியாது, ஆனால் நாம் இந்த சரீரத்தை விட்டுச் சென்றவுடனே நமக்காக காத்துக் கொண்டிருக்கிற ஒரு சரீரமாய் அது உள்ளது. இப்பொழுது நாமோ அங்கே அந்த சரீரத்திற்குள்ளாகப் பிரவேசிக்கிறோம். அந்த விதமான ஒரு சரீரத்தில்தான் தேவன் இருந்தார். ஏனென்றால் அவர், "நமது சாயலாகவும், நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக" என்றார். 279 இப்பொழுது, மனிதன் அந்த சரீரத்திற்குள்ளானபோது, அவன் மச்சங்கள், பறவைகள், மற்றும் வெளியின் மிருகங்களை ஆளுகை செய்கிறவனாயிருந்தான். ஆதியாகமம் 2-ல், "நிலத்தைப் பண்படுத்த எந்த மனுஷனும் இருந்ததில்லை " என்று கூறப்பட்டிருந்தது. அவர் மனுஷனை ஆணும் பெண்ணுமாக சிருஷ்டித்திருந்தார். ஆனால் நிலத்தை பண்படுத்த எந்த மனுஷனும் இருந்ததில்லை. அதன்பின்னர் தேவன் மனுஷனை பூமியின் மண்ணிலிருந்து உண்டுபண்ணினார். அவர் ஒரு-ஒரு மனிதக் குரங்கிற்கு உள்ளதைப் போன்ற ஒரு கரத்தை அவனுக்கு அளித்தார். அவர் ஒரு கரடிக்கு உள்ளதைப் போன்ற ஒரு பாதத்தை அவனுக்கு அளித்தார். அவர் அவனுக்கு அளித்து, அவர் அவனை அந்த சாயலாக உண்டுபண்ணினார். இந்தப் பூமிக்குரிய சரீரமோ மிருக ஜீவனின் சாயலில் உள்ளது. அது அதேவிதமான மூலப்பொருள்களிலிருந்து உண்டாக்கப்பட்டிருக்கிறது. உங்களுடைய சரீரம் ஒரு குதிரையைப் போல அல்லது ஒரு நாயைப் போல அல்லது அதைப் போன்ற எந்த ஒரு காரியத்தையும் போல் அதேவிதமான மூலப்பொருளிலிருந்து உண்டாக்கப்பட்டிருக்கிறது. அது சுண்ணகம், சாம்பலுப்பு, தாது எண்ணெய், இயலுக ஒளி போன்றவற்றிலிருந்து உண்டாக்கப்பட்டிருக்கிறது. நீங்கள்... இல்லை. எல்லா மாம்சமும் ஒரேவிதமான மாம்சமல்ல; அது வித்தியாசமான மாம்சமாய் உள்ளது, ஆனால் அது பூமியின் மண்ணிலிருந்து உண்டாக்கப்பட்டிருக்கிறது, அங்கிருந்தே அது உண்டானது. ஆனால் ஒரு மிருகத்திற்கும் ஒரு மனிதனுக்கும் இடையேயுள்ள வித்தியாசம் என்னவென்றால், தேவன் ஒரு மனிதனுக்குள் ஒரு ஆத்துமாவை வைத்தார். அவர் அதை மிருகத்திற்குள் வைக்கவில்லை. ஏனென்றால் மனிதனுக்குள் இருந்த அந்த ஆத்துமாவே அந்த ஆவிக்குரிய சரீரமாயிருக்கிறது. ஓ, நான் நான், நான் ஒரு போதும்... இந்த பாடத்திற்கு செல்லவில்லை, ஆனால் நான் இதைக் கூறியாக வேண்டும். 280 பாருங்கள். பேதுரு சிறைச் சாலையில் இருந்தபோது, கர்த்தருடைய தூதன் உள்ளே வந்து சிறைச் சாலைக் கதவுகளைத் திறந்தது உங்களுக்கு நினைவிருக்கிறதா? 281 அன்றொரு நாள் நாங்கள் இங்குள்ள சிறப்பு அங்காடியினூடாக சென்றுகொண்டிருந்தபோது, எங்களுக்கு முன்னால் இருந்த வாசல் திறந்தது. அப்பொழுது நான், "வேதத்தில் தான் முதலில் அந்தவிதமான வாசல் இருந்ததாக கூறப்பட்டுள்ளது" என்றேன். புரிகிறதா? இப்பொழுது அது தானாய் திறந்து கொள்ளுகிற கதவாய் உள்ளது. 282 பேதுரு வெளியே வந்து இந்த காவற்காரர் அருகில் நடந்த போது, அவர்கள் அவனுக்கு குருடாக்கப்பட்டிருந்தனர். அவன் உட்காவலைக் கடந்து, வெளிக் காவலையும் கடந்து, மதில் சுவற்றினூடாக கடந்து வீதிக்கு வந்தான். அவன் யாராயிருந்தான் என்பதை அவர்களில் ஒருவனும் அறிந்து கொள்ளவில்லை. அவர்கள் எந்த கவனமும் செலுத்தவில்லை. அவன் மற்றொரு காவல்காரன் அல்லது வேறு யாரோ ஒருவன் என்றே எண்ணிக்கொண்டனர். அவர்கள்... அவன் கதவண்டையில் சென்றபோது, அந்தக் கதவு தானாய் திறவுண்டு, அவன் வெளியே சென்றவுடன், அவனுக்கு பின்னாக தானாய் மூடிக்கொண்டது. அவன் அங்கே வெளியே வந்த போது, அவன் ஒரு சொப்பனம் கண்டிருந்ததாக எண்ணிக்கொண்டான். அப்பொழுது அவன் மாற்கு என்னும் போர்க்கொண்ட யோவானுடைய வீட்டிற்கு வந்தான். அப்பொழுது அங்கே அவர்கள் ஒரு ஜெபக்கூட்டம் நடத்திக் கொண்டிருந்தனர். அவன் கதவைத் தட்டினான். (சகோதரன் பிரான்ஹாம் பிரசங்க பீடத்தின் மேல் தட்டுகிறார். ஒலி நாடாவில் காலியிடம் ஆசி.) 283 ஓ, அவர் மகிமையானவராயிருக்கிறார். அவர் அற்புதமானவராயிருக்கிறார். இப்பொழுது, ஓ, அவர் தேவதூதருக்கு உதவியாகக் கைகொடாமல், ஆபிரகாமின் சந்ததிக்கு உதவியாகக் கைகொடுத்தார். தேவன் ஆபிரகாமின் சந்ததியானார். 284 இப்பொழுது, நமக்கு நேரமிருந்தால், உடன்படிக்கையில் அவர் அதை எப்படிச் செய்தார் என்பதைக் காண்பிக்க திரும்பிச் சென்று பார்க்கலாம். நான் அதன் பேரில் பிரசங்கித்ததை நீங்கள் அநேக முறை கேட்டிருக்கிறீர்கள், அதாவது எப்படி அவன் அந்த மிருகங்களை எடுத்து, அவைகளை இரண்டாகத் துண்டித்தான் என்றும், காட்டுப் புறாவையும், புறாக் குஞ்சையும் துண்டிக்காமலிருந்தான் என்பதையும் பிரசங்கிக்க கேட்டிருக்கிறீர்கள். அதன் பின்னர் அவன் நோக்கிப் பார்த்த போது, அவன் அதில் கொஞ்சம் புகையையும், காரிருளில் திகிலையும், மரணத்தையும் கவனித்தான். அதற்கடுத்து புகைகிற சூளையும், நரகத்தையும் கண்டான். ஆனால் அதற்கு அப்பால் ஒரு சிறிய வெண்மையான ஒளி சென்றது. அந்த சிறிய வெண்மையான ஒளி துண்டிக்கப்பட்ட பலியின் ஒவ்வொரு துண்டங்களின் நடுவேயும் சென்றது, அப்பொழுது அது அவர் என்ன செய்வார் என்பதைக் காண்பித்தது. அவர் அதைச் செய்தபோது, அவர் ஆணையிட்டு, அவர் ஒரு உடன்படிக்கையை எழுதி, அவர் என்ன செய்ய உள்ளார் என்பதைக் காண்பித்தார். 285 அவர், இயேசு கிறிஸ்து பூமிக்கு வந்தார்; தேவன், இம்மானுவேல், "தேவன் மாம்சத்தில் இருந்தார். அவர் கல்வாரியிலே இரண்டாகக் கிழிக்கப்பட்டார். அவருடைய ஆவியானது சபையின் மேல் திரும்பி வந்தது. அவருடைய சரீரமோ உயர்த்தப்பட்டு, தேவனுடைய சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிறார். தேவனுடைய சிங்காசனமாயிற்றே! சிங்காசனத்தின் மேலிருக்கிற ஒருவர் நியாதிபதியாயிருக்கிறார். நாம் அதை அறிவோம். நியாயத்தீர்ப்பு எங்கே? பிதாவானவர்தாமே. ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார். ஆகையால் அவர். அவருடைய ஜீவியமே ஒரு பலியாகி, பிரதான ஆசாரியராய் தம்முடைய சொந்த சரீரத்தோடு அங்கே வீற்றிருந்து நம்முடைய அறிக்கையின் பேரில் பரிந்து பேசுகிறார். ஆமென். சகோதரனே, அது உங்களுக்குள் ஏதோ ஒரு காரியத்தை வைக்கிறது. 286 கவனியுங்கள், "அவர் ஆபிரகாமின் சந்ததிக்கு உதவியாகக் கைகொடுத்தார். அவர் ஒரு மனிதனானார். தேவன் நம்மை மீட்கும்படிக்கு நமக்கு மத்தியிலே மாம்சமானார். வேறுவார்த்தைகளில் கூறினால், பாவிகளாகிய நாம் அவருடைய உடன் பங்காளிகளாகும்படிக்கு தேவன் பாவமானார். நாம் அவருடைய பங்காளிகளாகும்போது, நாம் அவருடையதில்... பங்காளிகளாகி... நாம் எழுபது வருடம் வாழக் கூடிய மக்களாயிருந்தோம். எனவே அவருக்கு குறிக்கப்பட்ட நேரத்தில், நாம் அவருடைய நித்திய ஜீவனில் பங்காளிகளாகும்படிக்கு தேவன் இறங்கிவந்து, எழுபது வருடம் வாழக் கூடிய நம்மில் ஒருவரானார். நாம் மீண்டும் பிறந்தபோது, நாம் தேவனுடைய குமாரரும், குமாரத்திகளுமாகி, ஒருபோதும் அழிந்து போகாத நித்திய ஜீவனைப் பெற்றுள்ளோம். ஓ, என்னே ஒரு என்னே ஒரு-என்னே ஒரு ஸ்தோத்தரிக்கப்பட்ட இரட்சகர்! ஓ, அதை எழுதுவதற்கு வழியேக் கிடையாது. அதை விவரித்துக் கூற வழியேக் கிடையாது. அது விளக்கிக் கூறுவதற்கு அப்பாற்பட்டதாயுள்ளது. அது எவ்வளவு மகத்தானது என்று எவருமே விளக்கிக் கூற முடியாது. "நீர் எவ்வளவு மகத்தானவர்! நீர் எவ்வளவு மகத்தானவர்!" என்பது உண்மையே, அன்றியும், அவர் ஜனத்தின் பாவங்களை நிவிர்த்தி செய்வதற்கேதுவாக, (இதை கவனியுங்கள்) தேவகாரியங்க ளைக்குறித்து இரக்கமும் உண்மையுமுள்ள பிரதான ஆசாரியராயிருக்கும்படிக்கு எவ்விதத்திலும் (அதைக் குறித்து சிந்தியுங்கள்), தம்முடைய சகோதரருக்கு ஓப்பாக வேண்டியதாயிருந்தது. இப்பொழுது ஒப்புரவாகும்படிக்கு, தேவன் நீதியை அறிந்திருந்தும், ஒரு பாவியாயிருப்பது என்ன என்பதை உணர, ஒப்புரவாகுதலினூடாக "ஒப்புரவாகும்படிக்கு திரும்பிச் செல்லவும், ஜனங்களின் மேல் இரக்கமாயிருக்கவும் அநீதியாக வேண்டியதாயிருந்தது. 287 அடுத்த வசனம், அதை இங்கே கவனியுங்கள். ஆதலால், அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே... 288 தேவனால் ஆவியில் பாடுபட முடியாது. அவர் சுகவீனத்தின் வேதனையை உணர, இச்சையின் சோதனையை உணர், இல்லாமையின் சோதனையை உணர, பசியின் சோதனையை உணர, மரணத்தின் வல்லமையை உணர மாம்சமாக வேண்டியதாயிருந்தது. அவர் மகத்தான ஆவியான யோகோவாவின் பிரசன்னத்தின் ஆவியில், மனிதனாய் அல்ல, ஆவியில் இந்த ஜீவியத்திற்கு பரிந்து பேச அதை தம்மேல் ஏற்றுக்கொண்டார். இயேசு நமக்காக பரிந்து பேச அதை ஏற்றுக் கொண்டார், ஏனென்றால் அதை எப்படி உணருகிறீர்கள் என்பதை அவர் அறிந்திருக்கிறார். நீங்கள் சுகவீனம் அடையும்போது, நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்பதை அவர் அறிந்திருக்கிறார். நீங்கள் சோதிக்கப்படும்போது, நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்பதை அவர் அறிந்திருக்கிறார். 289 இப்பொழுது, நாம் ஒரு குடியரசு தலைவருக்காக வாக்களிக்கும்போது, நீங்கள் எப்போதாவது கவனித்துள்ளீர்களா? ஒவ்வொரு விவசாயியும் ஒரு விவசாயியாக இருந்துவந்துள்ள ஒரு குடியரசு தலைவருக்காகவே வாக்களிப்பான், ஏனென்றால் அவன் அந்த விவசாயினுடைய வாழ்க்கையின் கடினமான பாகத்தை அறிந்திருக்கிறான். புரிகிறதா? எனவே புரிந்துகொள்ள சில மனிதர் அவருக்கு தேவைப்படுகிறது. 290 தேவனால் புரிந்துகொள்ள முடிந்ததற்கு முன்பு, அவருடைய மகத்தான பரிசுத்தத்தில் அவர் இருக்கிறார். அவர் மனிதனை ஆக்கினைக்குட்படுத்தின பிறகு எப்படி அவரால் புரிந்துகொள்ள முடியும்? அவருடைய பரிசுத்தத்தின் மூலம் அவர் மனிதனை ஆக்கினைக்குட்படுத்தினார். அவர் மனிதனை எப்படி நீதிமானாக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ளக் கூடிய ஒரே வழி மனிதனாவதன் மூலமேயாகும். 291 தேவன் கன்னியின் மீது நிழலிட, அவள் ஒரு சரீரத்தை பிறப்பித்தாள், அது யூத இரத்தமும் அல்ல, புறஜாதி இரத்தமும் அல்ல, ஆனால் அவருடைய சொந்த இரத்தமாகும். அது எவ்வித பாலியல் ஈடுபாடும் இல்லாமல், எந்த பாலியல் ஆசையும் இல்லாமல், தேவனால் சிருஷ்டிக்கப்பட்ட இரத்தம். இந்த இரத்த அணு, இந்த ஸ்திரீயின் கர்பத்தில் சிருஷ்டிக்கப்பட்டு குமாரனைப் பெற்றெடுத்தாள். அவர் யோவான் ஸ்நானனால் ஞானஸ்நானம் பண்ணப்பட்ட போது, யோவான், "தேவ ஆவியானவர் (ஒரு புறாவைப் போல) இறங்கி வந்து அவர் மேல் தங்குவதைக் கண்டு நான் சாட்சி பகருகிறேன்" என்றான். 292 இயேசு, "வானத்திலும், பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது" என்று கூற முடிந்ததில் வியப்பொன்றுமில்லையே. தேவனும் மனிதனும் ஒன்றாயினர். வானமும் பூமியும் ஒன்றையொன்று தழுவிக்கொண்டன. அவரே நம்முடைய பாவங்களுக்கு நிவிர்த்தி செய்யக் கூடியவராயிருந்தார். அந்தக் காரணத்தினால்தான் அவருடைய நாமத்தில் சுகமளித்தல் நிகழ்கிறது. அவர் உங்களுடைய வேதனையை அறிந்திருக்கிறார். 293 இந்த சிறிய பழைய பாடலை நீங்கள் எப்போதாவது கேட்டிருக்கிறீர்களா? இயேசு நீங்கள் உணருகிற வேதனையை அறிந்திருக்கிறார், அவரால் இரட்சிக்க முடியும், அவரால் குணப்படுத்த முடியும்; உங்களுடைய பாரத்தை கர்த்தரண்டைக் கொண்டு சென்று, அதை அங்கேயே வைத்து விடுங்கள். அது உண்மை . அவர் அறிந்திருக்கிறார். நம்முடைய சரீரம் வேதனையினால் வியாகுலப்படுகின்ற போது, நம்முடைய ஆரோக்கியத்தை மீண்டும் பெற முடியாமலிருக்கும்போது, ஜெபத்திற்கு பதிலளிக்கிற பரலோகத்தின் தேவனை நினைவுகூருங்கள்; நீங்கள் உணருகிற வேதனையை இயேசு அறிந்திருக்கிறார், அவரால் இரட்சிக்க முடியும், அவரால் குணப்படுத்த முடியும்; உங்களுடைய பாரத்தை கர்த்தரண்டைக் கொண்டு சென்று, அதை அங்கேயே வைத்துவிடுங்கள். 294 "அதை அங்கே அப்படியே வைத்துவிடுங்கள்" என்று அதைத்தான் அவர் வேண்டிக் கேட்கிறார். ஏன்? அவர் நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்று அறிந்திருக்கிற நம்முடைய பிரதான ஆசாரியராய் இங்கே நின்று கொண்டிருக்கிறார். அவர் உங்களை எப்படி திரும்பவும் கிருபைக்கு ஒப்புரவாக்க வேண்டும் என்றும், எப்படி உங்களுடைய ஆரோக்கியத்தை உங்களுக்கு திரும்ப கொண்டு வர வேண்டும் என்பதையும் அறிந்திருக்கிறார். அவர் அதைக் குறித்த எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார். அவர் பாடுபட்டார். நீங்கள் உங்களுடைய தலையை சாய்க்க ஒரு இடத்தை பெற்றுக்கொள்ளாமலிருக்கும்போது, அவரும் அதேவிதமாக இருந்தார். நீங்கள் ஒரே ஒரு மாற்று வஸ்திரத்தை உடையவர்களாயிருக்கும்போது, அவரும் அதேவிதமாக இருந்தார். நீங்கள் பரிகசிக்கப்பட்டு, துன்பப்படும்போது, அவரும் அதேவிதமாக பரிகசிக்கப்பட்டு, துன்பப்படுத்தப்பட்டார். 295. இப்பொழுது கடைசி வசனத்தை கவனியுங்கள். சரி. ....அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார். இல்லையென்றால், வேறு வார்த்தைகளில் கூறினால், அவர் அவர்களுக்கு பாதுகாப்பளிக்கக் கூடியவராய், அவர்களுக்கு உதவிசெய்யக் கூடியவராய், அவர்களிடத்தில் பரிவிரக்கம் கொள்ளக் கூடியவராய் இருக்கிறார். ஏனென்றால் தேவன் தாமே அதை உணரும்படிக்கு மனிதனானார். 296 அன்றொரு இரவு நாம் அதன் பேரில் போதித்தது நினைவிருக்கிறதா? எப்படி அந்த தேவன். அதாவது மரணம் தனக்குள் ஒரு கொடுக்கைக் கொண்டிருந்து, அதில் ஒரு பயமுறுத்துதலைச் செய்து வந்தது. "எனவே அவர்கள் தங்களுடைய ஜீவகாலமெல்லாம் இந்த மரணத்தைக் குறித்த அடிமைத்தனத்தில் இருந்தனர். ஆகையால் அந்த மரணத்தின் கொடுக்கை எடுத்துப் போகும்படியாகவே இயேசு வந்தார். அவர் மலையின் மேல் சென்றுகொண்டிருந்தபோது, நாம் அதை எப்படியாய் விளக்கிக்காட்டினோம் என்பது நினைவிருக்கிறதா? அவருடைய அங்கியில் சிறிய சிவப்பு புள்ளிகளாய்க் காணப்பட்டு, சற்று கழித்து அவையாவும் ஒரே பெரிய புள்ளியாக மாறி, இரத்தமானது அவரைச் சுற்றிப் பீறிட்டுத் தெறித்தது. அவருடைய சிறிய, நலிவுற்ற சரீரத்தைக் கொண்டு அவரால் மேற்கொண்டு அடியெடுத்து வைக்க முடியாமல், அவர் கீழே விழுந்தார். சீரேனே ஊரானான சீமோன் என்ற கருப்புநிற மனிதன் சிலுவையை மலையின் மேல் சுமந்து செல்ல அவருக்கு உதவினான். அவர்கள் அவரை சிலுவையில் வைத்து ஆணியடித்தபோது, அவர் தண்ணீருக்காக கூச்சலிட்டு கதறினார். இரத்தம் வடிந்து கொண்டிருக்கிற எந்த மனிதனுக்கும் தண்ணீர் தேவைப்படுகிறது. 297 அன்றொரு நாள் இரவு, "மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல், தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது" என்பதன் பேரில் நான் பிரசங்கித்தது நினைவிருக்கிறதா? மானானது காயப்பட்டு, இரத்தத்தை இழந்து கொண்டிருந்தால், அது ஜீவிக்க தண்ணீரைக் கண்டடைந்தாக வேண்டும், இல்லையென்றால், அது மரித்துப் போகும். 298 நான் பதினான்கு வயதுடையவனாயிருந்தபோது, நான் சுடப்பட்டு வயலிலே கிடந்தேன். பன்னிரெண்டு என்ற குண்டின் விட்ட அளவு கொண்ட வேட்டைத்துப்பாக்கி என்னுடைய கால்களின் மேல் வெடித்துவிட்டபடியால், அது சிதைந்த ரொட்டித்துண்டு போலானது. அப்பொழுது நான் தண்ணீருக்காக கதறி, "ஓ, எனக்குத் தண்ணீர் தாருங்கள்" என்றேன். எனக்கு மரத்துப் போய்விட்டது. என்னுடைய உதடுகளும் மரத்துப் போனது. 299 அப்பொழுது என்னுடைய நண்பன் ஒரு விதமான புழுக்கள் மற்றும் சேறு நிறைந்த பழைய குட்டைக்கு ஓடினான். அது என்னவாயிருந்தது என்று கூட நான் கவலைப்படவில்லை. அவன் அதில் நிரம்பியிருந்த தண்ணீரை சற்று தெளிவாகத் தள்ளிவிட்டு அவனுடைய தொப்பியில் இந்த விதமாகப் பிடித்துக் கொண்டு வந்து, நான் என்னுடைய வாயைத் திறந்து கொண்டிருக்க, அவன் அந்தத் தொப்பியிலிருந்து பிழிந்து என் வாயில் ஊற்றினான். நீங்கள் அந்த நேரத்தில் தண்ணீரைப் பெற்றுக் கொள்ளத்தான் வேண்டும். 300 அவருக்கோ இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. எனவே அவர், "எனக்கு குடிக்க தண்ணீர் கொடுங்கள்" என்றார். அவர்களோ கடற்காளானை எடுத்து, காடியில் தோய்த்து அவருக்குக் கொடுக்க, அவரோ அதைப் புறக்கணித்துவிட்டு, அதைக் குடிக்க மறுத்துவிட்டார். அவர் மானிட வர்க்கத்தை ஒப்புரவாக்குதலுக்கு கொண்டு வரும்படிக்கு நம்முடைய ஸ்தானத்தில் தேவ ஆட்டுக் குட்டியாய் மரித்துக் கொண்டிருந்தார். அது என்னவாயிருந்தது? பரலோகத்தின் தேவன். 301 பில்லி சண்டே என்பவர் ஒருமுறை, "தூதர்கள் ஒவ்வொரு புதரிலும் அங்கே அமர்ந்துகொண்டு, நீர் உம்முடைய கரத்தை அசைத்து உம்முடைய ஒரு விரலை மாத்திரம் சுட்டிக்காட்டும், நாங்கள் சூழ்நிலையையே மாற்றி விடுகிறோம்" என்று கூறினதாகக் கூறினார். 302 அந்த மரியாதையற்ற மதவெறியர்களின் கூட்டம், D.D., Ph.D., என்ற பெரிய பட்டம் பெற்ற கல்வி பயின்ற பண்டிதர்கள் என்று அழைக்கப்பட்டவர்கள் அவருக்கு அருகில் நடந்து சென்று, "இப்பொழுது, நீர் தேவ குமாரனாயிருந்தால், நீ மற்றவர்களை இரட்சித்தாய்; ஆனால் உன்னையே உன்னால் இரட்சிக்க முடியவில்லையே, சிலுவையிலிருந்து இறங்கி வா, அப்பொழுது நாங்கள் உம்மை விசுவாசிப்போம்" என்றனர். 303 அவர்கள் அவருக்கு ஒரு வாழ்த்துரை வழங்கிக்கொண்டிருந்தனர் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. அவர் தம்மை இரட்சித்துக் கொண்டிருக்க முடியும். ஆனால் அவர் தம்மை இரட்சித்திருந்தால், மற்றவர்களை அவரால் இரட்சித்திருக்க முடியாது. ஆகையால், அவர் தம்மையே ஒப்புக் கொடுத்தார். அவருடைய நாமம் ஸ்தோத்தரிக்கப்படுவதாக. நான் இரட்சிக்கப்படும் படிக்கும், நீங்கள் இரட்சிக்கப்படும்படிக்கு அவர் தம்மையே ஒப்புக்கொடுத்தார். ஓ, என்ன இணையற்ற அன்பு! 304 அவர் சுகவீனமாயிருந்திருக்க வேண்டியதில்லை. அந்த விலையேறப் பெற்ற கன்னிப் பிறப்பின் சரீரம் சுகவீனமாயிருந்திருக்க வேண்டியதில்லை. ஆனால் நான் சுகவீனமாயிருந்தபோது, எனக்காக எப்படிப் பரிந்து பேச வேண்டும் என்பதை அறியும்படிக்கு அவர் சுகவீனமானார். 305 அவர் களைப்புற்றிருக்க வேண்டியதில்லை. ஆனால் அவர் களைப்புற்றார். நான் ஒரு சமயம் அதன் பேரிலான ஒரு சிறு சரித்திர சம்பவத்தை வாசித்துள்ளேன். அது ஆதாரப் பூர்வமாக நம்பத்தகுந்ததா அல்லது இல்லையா என்று எனக்குத் தெரியாது. "அவர் நாயீன் என்னும் ஊரிலிருந்த கைம்பெண்ணின் மகனை உயிரோடெழுப்பியப் பிறகு, அவர் ஒரு கல்லின் மேல் அமர்ந்து தலைவலியினால் முனகினாராம்," ஏனென்றால் அவர் நம்முடைய சுகவீனத்தை சுமக்க வேண்டியதாயிருந்தது. 306 அவர் நம்முடைய பாவத்தை சுமக்க வேண்டியதாயிருந்தது, கல்வாரியிலே அந்த பண்டைய மரணம் என்னும் தேனீ ஒருமுறை அவரைக்கொட்டி தன்னுடைய கொடுக்கினை நங்கூரமிட்டுப் பதித்தபோது, அவர் மரித்து போனார். ஒரு தேனீ தன்னுடைய கொடுக்கினால் கொட்டும்போது, அதனால் அதற்குப்பின் ஒருபோதும் கொட்ட முடியாது. தேனீ பறந்து செல்லுகிறபோதும், அல்லது கொட்டுகிற எந்தப் பூச்சியும், அது தன்னுடைய கொடுக்கினால் கொட்டிவிட்டு, அது தன்னுடைய கொடுக்கை வெளியே இழுத்துக் கொள்ளுகிறது. ஆனால் அது இன்னமும் ஒரு தேனீயாயிருந்தாலும், அது தன்னுடைய கொட்டும் கூர்மையான கொடுக்கை உடையதாயிருக்கவில்லை. எனவே அதன்பின்னர் அது செய்யக் கூடிய ஒரேக் காரியம் ரீங்காரமிட்டு, அதிக இரைச்சலை மாத்திரமே உண்டு பண்ண முடியும். 307 அந்த மரணம் விசுவாசிக்கு செய்ய முடிந்த ஒரேக் காரியம் அதிக இரைச்சலை மாத்திரமே உண்டுபண்ணுகிறதாயுள்ளது. ஆனால், அல்லேலூயா, கர்த்தருடைய நாமம் ஸ்தோத்தரிக்கப்படுவதாக, அவர் தம்முடைய சொந்த மாம்சத்தில் மரணத்தின் கொடுக்கை நங்கூரமிட்டுப் பதித்தார். இம்மானுவேல் அதைச் செய்தார். மூன்றாம் நாளிலே மீண்டும் உயிரோடெழுந்து, அங்கிருந்து அந்த கொடுக்கை அசைத்து பிடுங்கியெடுத்து, இன்றிரவு அழிவில்லாதவராய் இருக்கிறார். அவருடைய ஆவியானது இந்தக் கட்டிடத்தில் உள்ளது. அவருடைய ஆவியானது இந்தக் கட்டிடத்தில் உள்ளது. அவர் தம்மை உயிருள்ளவராக நமக்கு மத்தியிலே நிரூபிக்கிறார். அதுவே நம்முடைய மேசியாவாகும். அதுவே நம்முடைய ஸ்தோத்தரிக்கப்பட்ட இரட்சகராகும். 2